ஆன்மிகப் பிரசாரகர்களுக்கான இணைய வழி ( Zoom) மூலமான அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி புதிய பிரிவு ஆரம்பம்
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பயிற்சி நிலையம் ஊடாக, நாடளாவிய ரீதியில், இணைய வழியில் Zoom மூலமாக, ஆன்மிகப் பிரசாரகர்களுக்கான அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – 2021/ 2022 இற்கான புதிய பிரிவு ஆரம்பமாகவுள்ளது.
இந்து சமயத்தின் ஆழமான தத்துவங்களை அறிந்துகொண்டு, தனிமனிதர்களது ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் உன்னத பணியில், இந்து சமய ஆர்வலர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தோடு இப் பயிற்சி நெறி ஆரம்பமாகவுள்ளது. இந்து சமய வரலாறு, இந்துக் கலைகள், இலக்கியம், இந்து தத்துவம் இந்து வாழ்வியல் நம்பிக்கைகள் மற்றும் ஆலய வழிபாடு குறித்த அறிவினைப் பெற்றுக்கொள்ளுதல். சைவநெறி வழிகாட்டுகின்ற மனித விழுமியங்களை அறிந்து பின்பற்றுதல். இவற்றின் மூலமாகப் பெற்றுக்கொண்ட அறிவினைப் பிரசங்கமுறையியல் ஊடாக வெளிப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுதல் முதலான விடயங்கள் இப் பயிற்சி நெறியில் உள்ளடக்கம் பெறுகின்றன.
இந்து சமய ஆர்வலர்கள் மற்றும் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் எனப் பதினெட்டு (18) வயதுக்கு மேற்பட்ட இருபாலாரும் இப் பயிற்சி நெறியில் பங்குபற்ற முடியும். 15 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2021 அன்று ஆரம்பமாகவுள்ள இப் பயிற்சி நெறியானது, ஆறு மாத கால எல்லைக்குள் 120 மணித்தியால வகுப்புகளை உள்ளடக்கியது. பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே இடம்பெறும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2021 இற்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
கற்கைநெறி தொடர்பான பதிவுகளுக்கு, திரு.ம.செந்தூரன். (அபிவிருத்தி உத்தியோகத்தர்) – 0714402318, 0762038128 இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,வடமாகாணப் பிராந்திய அலுவலகம். இல. 695, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்னும் அலுவலக முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.
அ.உமாமகேஸ்வரன்,
பணிப்பாளர் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
Download Advertisement – Notice |
Closing Date: 2021-10-10 |